ஆம்பூர், பிப். 7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில், ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியி லிருந்து 2 டன் செம்மரக் கட்டைகளை சொகுசு கார் மூலம் கடத்தி வந்துள்ளனர். வனப்பகுதி வழியாக சென்றபோது அந்தக் கார் திடீரென பழுதாகி பாதி வழியில் நின்று போயுள்ளது. அப்போது அவ்வழியாக வனத்துறையினர் வருவதை பார்த்தவுடன் காரை அங்கேயே விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். மேலும், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கூடவே வந்த 2 மர்ம நபர்களும் தப்பியோடியுள்ளனர். இதன் காரண மாக சந்தேகம் அடைந்த வனத்துறையினர் பாதியில் நின்றி ருந்த சொகுசு காரை திறக்க முயன்றனர். இருந்தபோதிலும் அந்த காரை உடைத்து உள்ளே பார்த்ததில் அதில் 2 டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கார் மற்றும் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து ஆம்பூர் வனத்துறை அலுவலகத் திற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து, யார் காரில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தனர். எங்கிருந்து இந்த செம்மரக்கட்டைகளை கொண்டு வந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த கடத்தல் காரர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்த சம்பவ இடத்திற்கு பார்வையிட வந்த வன ஆய்வாளர் இளங்கோ மற்றும் துணை ஆய்வாளர் சம்பத்குமார் சொகுசு காரை உடைத்து அதனுள் நடத்திய சோதனையில் 7 அடி நீளத்தில் 6 துண்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவற்றை ஆம்பூர் வனத்துறைக்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட விசாரணையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் தமிழகத் தலைவர் பாஸ்கரன் என்பவ ரின் போட்டோ இருந்தது. வாணியம்பாடி நகர கோனா மேடு பகுதியை சேர்ந்தவரான இவரது டைரி மற்றும் சில ஸ்டிக்கர்கள் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறி முதல் செய்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.