செங்கல்பட்டு, பிப். 21- செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், புத்தக வாசிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் 6வது செங்கை புத்தக திருவிழா செங்கல்பட்டு நகரம் அலிசன் காசி மேல்நிலைப்பள்ளியில் பிப்ரவரி 20 முதல் 28 வரை 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதன் துவக்க விழா பிப்ரவரி 20 மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவங்கியது. இந்த புத்தக கண்காட்சி யில் 60 அரங்குகள் அமைக்கப் பட்டு பிரமாண்டமான முறை யில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. துறை ரீதியான அரங்குகளும் அமைக்கப் பட்டுள்ளது. இதில், பல்வேறு பதிப்பகத்தார்கள் தங்களது படைப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைத்துள்ள னர். இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும், புத்தகத் திரு விழா நடைபெறுகின்ற 9 நாட்க ளும் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றது.இதில், பட்டி மன்றம், கலந்துரையாடல், நடனம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. புத்தகத் திரு விழா வில் கலந்து கொண்டு புத்த கங்களை வாங்கும் மாணவர்க ளுக்கு ரூ.100-க்கான கூப்பன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். விழா வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்எஸ்.பாலாஜி, கூடுதல் ஆட்சியர் வெ.ச.நாராயண சர்மா, சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.