மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கிருஷ்ணகிரி அரசு கலை மற்றும் அறிவியல் ஆடவர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளைத் தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இளவரசன், தலைவர் சக்திவேல், துணைத் தலைவர் சூர்யா, கிளைச் செயலாளர் ஜான்சாமுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.