துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு:- நல்ல குணம், திறமை, பண்பு மற்றும் நடத்தை ஆகிய நான்கு தகுதிகளின் அடிப்படையில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யுங்கள்.
ச.சா - கட்சித்தலைவரா இருந்தப்ப நீங்க ஏன் செய்யல..??
பிரதமர் மோடி :- நமக்கு வாக்களிக்காதோருக்கும் பணியாற்ற வேண்டும்.
ச.சா - மறைமுகமா தூண்டி விடுற மாதிரில்ல தெரியுது...!!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை.
ச.சா - மத்திய அரசு அனுப்பவேயில்லனு முதல்வர் சொல்றாரு.. என்ன நடக்குது...??
மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ் :- எதிர்க்கட்சிகள் தோல்வியடையும்.
ச.சா - சிவசேனாவ எந்தப் பட்டியல்ல வெச்சுருக்கீங்க.. கூட்டாளியா, எதிர்க்கட்சியா..??