சென்னை, ஜூலை 7- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மீது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அப கரித்தது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பி லான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்துவிட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தனர்.இத னிடையே இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட சி.பி. சி.ஐ.டி. போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன் னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள் ளிட்டோரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வெள் ளிக் கிழமை எம்.ஆர்.விஜயபாஸ்க ரின் ஆதரவாளர்கள் வீடுகளில் கரூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட சி.பி .சி .ஐ .டி போலீசார் சோதனை நடத்தினர். வழக்கில் தொடர்புடைய யுவராஜ், ரகு, செல்வராஜ், மாரப்பன் வீடுகளி லும் சோதனை நடைபெற்றது.இத னிடையே இந்த வழக்கில் இடைக் கால ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி ஆகியோரின் மனு வை சனிக்கிழமையன்று மாவட்ட அமர்வு நீதிபதி தள்ளுபடி செய் தார்.
இதைத்தொடர்ந்து, ஞாயிற் றுக்கிழமை கரூரில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி ஆகி யோரின் வீடு மற்றும் அலுவலகங்க ளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதி ரடி சோதனை நடத்தினர்.சென்னை, கரூர் உள்பட 8 இடங்களில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோத னையில் ஈடுபட்டனர்.
சென்னையில் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட சுந்தரம் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் எம்.ஆர்.விஜய பாஸ்கரின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் ரம்யா தலைமையி லான போலீசார் சோதனை நடத்தி னர்.
கரூர் - கோவை ரோடு என்.எஸ். ஆர் நகர் அடுக்கு மாடி குடியிருப் பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்க ரின் வீடு, அருகில் உள்ள நூல் குடோன், ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட் மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு ஆகிய இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.இதேபோல் கரூர், கோவை சாலை யில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகம், திரு.வி.க சாலையில் உள்ள எம்.ஆர்.வி. டிரஸ்ட் அலுவல கம், ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற் றது. ஒரே நாளில் மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடை பெற்றது.
7 குழுக்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. அதி காரிகள் பலத்த போலீஸ் பாது காப்புடன் சோதனை நடத்தினர். மேலும் சோதனை நடத்த திட்ட மிட்டிருந்த சில இடங்களில் பூட்டு போடப்பட்டு ஆட்கள் இல்லாத கார ணத்தால் நீண்ட நேரமாக காத்தி ருந்தனர்.இந்த திடீர் சோதனை காரணமாக கரூர் பகுதியில் பர பரப்பு நிலவியது. இதை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.