tamilnadu

img

காலிப் பணியிடங்களை நிரப்புக

கிருஷ்ணகிரி, ஜூன் 30- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவ லர்கள் சங்கத்தின்  5 ஆவது மாவட்ட மாநாடு கிருஷ்ண கிரியில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜேம்ஸ் குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலகண்ணன் வர வேற்றார். மாநிலச் செயலா ளர் ஆறுமுகம் துவக்கிவை த்தார். மாவட்டச் செயலா ளர் காமராஜ் வேலை அறிக்கையும், பொருளாளர் கோவிந்தராஜ் நிதி அறிக்கையும் வாசித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சந்திரன், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தேவராஜ், நிர்வாகிகள்  பிரதாப், குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்றினார்.

புதிய நிர்வாகிகள்:

மாவட்டச் செயலாளராக காமராஜ், தலைவராக சரவணன், பொருளாளராக கோவிந்தராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலை வருமான சுப்பிரமணியனின் பழிவாங்கும் நோக்கத்தில் தற்காலிக பணியிடை நீக்கம் உத்தரவை திரும்ப பெற வேண்டும், புதிதாக அறிவிக்கப்பட்ட அஞ்செட்டி, சூளகிரி, ஊராட்சி ஒன்றியங்கள் அறி விக்கப்பட்டு ஓராண்டாகியும் அதற்கான எந்த கட்டு மான வேலைகளும் துவங்கப்படவில்லை. எனவே கட்டுமானப் பணி களை துவக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்க ளும் நடத்தப்படாததால் ஊழியர்களுக்கு கடும் பணிச்சுமையும், மக்க ளுக்கும் ஊழியர்களுக்கும் கடும் பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அஞ்செட்டி, சூளகிரி ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த பணிகளை உடனடியாக துவங்கவேண்டும்,  காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;