tamilnadu

img

சிபிஎம் முயற்சியால் ஆக்கிரமிப்பு அகற்றம்

விழுப்புரம்,ஏப்.23- விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், சென்னகுணம் கிராமத்தில் உள்ள  உடையான்குளம்  ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி சிபிஎம் கட்சியின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம், சென்னகுணம் கிராமத்தில் சுமார் 87 ஏர்ஸில்  உடையான்  குளம் ஒன்று உள்ளது, அந்த குளத்தை சுற்றி அங்குள்ள சிலர்  ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். அதனால் அந்த குளம் சுருங்கி போய் கிடந்தது, சுமார் ஓர் ஆண்டுகளுக்கு முன் அக்கிராம மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை சார்பில் அந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்த னர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தி சம்மந்தப்பட்ட அலு வலர்களை சிபிஎம்  நேரடியாக சென்று  வலியுறுத்தியது, இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட அதி காரிகள், குறுவட்ட ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்  மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராமேஸ்வரன், மற்றும் துணைத் தலைவர் சித்தார்த்தன், கவுன்சிலர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செய லாளர் எம்.நாராயணன், வட்ட செயலாளர் எஸ்.கணபதி ஆகியோர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள்  ஒத்துழைப்புடன்  ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த குளத்தின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.