tamilnadu

img

காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி

காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டச் செயலாளர் வெற்றிவீரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செல்லையா உள்ளிட்ட பலர் பேசினர். 100-நாள் வேலைக்கு தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்த விடுமுறையுடன் கூடிய கூலி தொடர்ந்து வழங்க வேண்டும்  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.