சென்னை, மே 25-மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7 இடங்களிலும் படுதோல்விஅடைந்த நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பாமக நிறுவனர் பதில் அளிக்கவில்லை.சனிக்கிழமையன்று திண்டிவனம்அருகே கோனேரிகுப்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிகப்பெரும்பான்மையான அளவில்இந்திய மக்கள் பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். வரலாறு காணாத மிகப்பெரியவெற்றியை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டாவது முறையாகப் பிரதமராகும் மோடிக்கு எங்கள் சார்பாகவும், பாமக சார்பாகவும் வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் 7 இடங்களில் பாமக தோல்வியடைந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ராமதாஸ் மற்றும்அங்கிருந்த பாமக நிர்வாகிகள் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் உடன் இருந்தார்.அதிமுக- பாஜகவுடன் சேர்ந்து, தான் ஏற்கெனவே பேசிவந்த ‘கொள்கை’களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு தேர்தலை எதிர்கொண்ட ராமதாசுக்கு தமிழக மக்கள்மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.