tamilnadu

img

மாநிலங்களவை தேர்தல்: மதிமுக வேட்பாளர் வைகோ

 சென்னை,ஜூலை 2-  நாடாளுமன்ற மாநிலங்க ளவை உறுப்பினர் தேர்தலில் போட்டி யிட மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப் பட்டுள்ளார். மதிமுகவின் உயர்நிலை மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை எழும்பூரிலுள்ள தாயகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப் பினர் தேர்தலில் மதிமுக சார்பில், பொதுச்செயலாளர் வைகோவை, வேட்பாளராக முன்னிறுத்து வது என்றும், மதிமுகவுக்கு மாநிலங்களவை இடம் அளித்த, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும்,  2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் ஆவார்.