tamilnadu

img

ராஜேந்திர பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்

சென்னை:

கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய விவகாரத்தில் அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அர வக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். 


அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பின. இந்து அமைப்புகளும், பாஜக, அதிமுக உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி உள்ளிட்டோர் கமலின் கருத்தை ஆதரித்து பேசியிருந்தனர், கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதுபோன்று இந்துக்கள் மற்றும் இஸ்லா மியர்களுக்கு இடையே மதகலவரத்தை தூண்டும் வகையில் கமல் பேசி உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹுவிடம் புகார் அளிக்கப்பட்டது. 


இதனிடையே சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் மற்றும் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதற்கிடையே கமல் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்திருந்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலை யில் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. 


இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செய லாளர் அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கையில், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் மாண்பும்,தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்டவிரோத மாக ‘மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது. மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி, தன் பதவிப் பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண் டும்” என்று கூறியுள்ளார்.


அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, “இந்து தீவிரவாதம் பற்றி கமல் பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுவும் தீவிரவாதம்தான். சுதந்திர இந்தி யாவில் முதல் பயங்கரவாதி மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், இந்து மகா சபை போன்றவற்றில் உள்ளவர்கள், மாற்று கருத்து உடையோரை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கை உடையவர்கள். ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்புக்கு இணையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.” என்று கூறியிருக்கிறார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி மட்டும் அல்ல பயங்கரவாதி என்று சொல்வதே பொருத்தமானது. ஆனால், தேர்தல் பரப்புரையின் போது மதத்தைக் குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிக்கு முரணாக பேசியிருப்பது ஏற்புடையதல்ல. இந்து என்று குறிப்பிட்டிருக்க வேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

;