tamilnadu

ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 25-தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆந்திராவின் ராயலசீமா முதல் குமரிக் கடல் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையாலும் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை 10 மணியுடன் முடிவடைந்த  24 மணி நேரத்தில் சித்தார், பெருஞ்சாணி ஆகிய இடங்களில் 6 சென்டிமீட்டரும்,பேச்சிப்பாறை, பேரையூர் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. உள் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.