tamilnadu

img

அருங்காட்சியகங்கள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் அருங்காட்சியகங்கள் நாளை முதல் திறக்கப்பட்ட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அவை பின்வருமாறு:

1) அருங்காட்சியகங்களுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
2) அருங்காட்சியகங்களில் கொரோனா பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
3) மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
4) 23- 30 டிகிரி வரை குளிர்சாதன வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
5) கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், பள்ளி கல்லூரி மாணவர்கள் மொத்தமாக வரும்பட்சத்தில், முன்கூட்டியே அவர்களுக்கான பார்வை நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.
6) அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரத்தை 30 நிமிடங்கள் வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
7) பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனைகள் மேற்கொள்ள போதுமான அளவு தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வழங்க வேண்டும்.
8) உள்ளே வருவதற்கு ஒரு வழி, வெளியே செல்ல ஒரு வழி அமைக்க வேண்டும்.
9) அருங்காட்சியகங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள், சிலைகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
10) அருங்காட்சியகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும், அவைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டும்.