‘அமெரிக்க வங்கிகள் திவால் என்ன பாடம் இந்தியாவிற்கு?’ எனும் பிரசுரம் வெளியீட்டு நிகழ்வு செவ்வாயன்று (ஜூலை 11) சூளைமேட்டில் நடைபெற்றது. வி.பி.சி. நினைவு நூலகம் சென்னை-2 சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன இணைச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட, தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார். தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு பொருளாளர் எஸ்.சிவசுப்பிரமணியன், நூலாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.