சென்னை,ஜூன் 2-சென்னையில் கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் 728 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தஜூன் மாதம் இதன் விலை 25 ரூபாய்உயர்ந்து ரூ.753-க்கு விற்கப்படுகிறது.சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எரிவாயு சிலிண்டரையும், கடைகளுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களையும் விநியோகித்து வருகின்றன.சர்வதேச சந்தையில் நிலவும்கச்சா எண்ணெய் விலை நிலவரத் துக்கு ஏற்ப மாதம்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது. இதன்படி ஒவ்வொரு மாதம் 1ஆம் தேதி சமையல் எரிவாயு விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.தமிழகத்தில் கடந்த மே மாதம் வீட்டு சிலிண்டர் 728 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஜூன் மாதம் இதன் விலை 25 ரூபாய் உயர்ந்து ரூ.753-க்கு விற்கப்படுகிறது. ஓட்டல்மற்றும் கடைகளில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை 50 காசு உயர்ந்து 1427.50 ரூபாயாக உள்ளது.தில்லியில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.737.50, கொல்கத்தாவில் ரூ.763.50, மும்பையில் ரூ.709.50 விலைக்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் கூறுகையில் தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசுசமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளதாக கூறினர்.