tamilnadu

img

திருவள்ளூர் அருகே வாக்குச் சாவடி மையம் சூறையாடல்: வாக்குப் பெட்டிக்கு தீ வைப்பு

திருவள்ளூர், டிச. 27- திருவள்ளூர் அருகே பாப்ப ரம்பாக்கம் ஊராட்சியில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாக வாக்கு கள் பதிவானதால் ஆத்திரம் அடைந்த  மற்றொரு வேட்பாளரின் (பா.ம.க)  ஆதாரவாளர்கள் வாக்குச்சாவ டிக்குள் அத்துமீறி நுழைந்து மேஜை நாற்காலிகளை சூறையாடி வாக்குப் பெட்டியை கைப்பற்றி தூக்கிச் சென்று தீ வைத்தனர். இதனால் சுமார் 2 மணிநேரம் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப் பட்டது. அப்போது அங்கு வந்தி ருந்த வாக்காளர்கள் வாக்குப் பதிவு  நடத்தக் கோரி சாலை மறியலில் ஈடு பட்டனர். அவர்களை காவல் துறை யினர் தடியடி நடத்தி கலைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 83, 84, 85 ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் காலை முதல் 12 மணி வரையில் அமைதி யாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் பகல் 12 மணி யளவில் வாக்குச்சாவடி எண் 84இல் குறிப்பிட்ட அரசியல் கட்சி  வேட்பாளருக்கு சாதகமாக வாக்கு கள் பதிவாகி இருந்ததாகக் கூறப்படு கிறது

 இந்த வாக்குச்சாவடியில் 6 பெண் அலுவலர்கள் உட்பட 7 அதி காரிகள் பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு வேட்பாள ரின் ஆதாரவாளர்கள் சுமார்  10 பேர் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை சூறையாடினர். வாக்குப் பதிவு சீட்டுக்களையும், வாக்குப் பதிவு பெட்டியையும் கைப்பற்றி தூக்கிச் சென்று தீ வைத்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாக்குச்சாவடியில் 2 பேர் மட்டுமே  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்ததால் அந்த கும்பலை தடுக்க முடியவில்லை.  இதில் வாக்குச் சாவடி 84இல்  பகல் 12 மணி வரையில் 490 வாக்கு கள் மட்டும் பதிவாகியிருந்த நிலை யில் வாக்குப் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 83, 84, 85 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் பலத்த காவல் துறை பாது காப்புடன்  வாக்குச் சாவடி 85இல்  மட்டும் பகல் 2 மணிக்கு மேல் வாக்குப் பதிவு தொடங்கி நடை பெற்றது.

;