tamilnadu

img

பெரியார் நகர் அரசு மருத்துவமனை ‘பெரியார் அரசு மருத்துவமனையாகிறது புதிய பெயர் சூட்டிய முதலமைச்சர்

பெரியார் நகர் அரசு மருத்துவமனை  ‘பெரியார் அரசு மருத்துவமனையாகிறது  புதிய பெயர் சூட்டிய முதலமைச்சர்

கொளத்தூர், பெரியார் நகரில் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தொடங் கப்பட்ட அரசு மருத்துவமனை திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு நவீன வசதிகளுடன் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனைக்கு “பெரியார் அரசு மருத்துவமனை” என்று பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்.   கொளத்தூர், பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில்ரூ.210 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.. சில சிறப்பு சிகிச்சை களை வழங்குவதற்காக கூடுதலாக மூன்று தளங்களுடன் விரிவாக்கம் செய்திட கடந்தாண்டு மார்ச் மாதம்  முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ஆறு தங்களுடன் கட்டப் பட்டுள்ள இப்புதிய மருத்துவமனை யின் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட தமிழ்நாடு விபத்து மற்றும்  அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, புறநோயா ளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப் பேறு பிரிவு, அறுவை அரங்கங்கள், நவீன இரத்த வங்கி, இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கான மருத்துவப் பிரிவுகள், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்ப கட்டுப்பாடு வார்டு, நான்காம்  தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, ஐந்தாம் தளத்தில் இருதயவியல் பிரிவு,  அறுவை அரங்கங்கள், தோல்நோய் வார்டு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260  படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள் ளது. இப்புதிய மருத்துவமனையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயி றன்று (பிப்.23) நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். சென்னை, கொளத்தூர், ஜெகநாதன் தெருவில் வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ். பகிர்ந்த பணியிட மையம் மற்றும் மாண வர்களுக்கான “கல்வி மையம்” உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்திற்கும் அவர் சென்று பார்வையிட்டு, அங்கு படிக் கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பகிர்ந்த பணியிடத்தில் பணிபுரி வோர்களிடம் உரையாடி, அவர்களின்