tamilnadu

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை

சென்னை, டிச.10- ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரிய ஆட்கள் தேவை என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas  cutter  மற்றும் Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படு கிறார்கள். விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcman power.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் ovemclnm@gmail.com என்ற  மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பபடிவம்,  கல்வி,  பணி அனு பவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 25.12.2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.