tamilnadu

img

பாஸ்போர்ட் இணையதள சேவை சீரானது

சென்னை, செப்.2- தொழில்நுட்ப பராமரிப்பு பணிக் காக பாஸ்போர்ட் இணையதள சேவை ஆகஸ்ட் 29  ஆம் தேதி இரவு 8 மணி முதல் 2 ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது.

இந்த 5 நாட்களில் விண்ணப்ப பரிசீல னை, அப்பாய்ன்மென்ட் உள்ளிட்ட சேவை கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டி ருந்தது.

இந்த நிலையில், தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை யடுத்து பாஸ்போர்ட் இணையதள சேவை திங்கட்கிழமை முதல் சீரானது. காலை 6 மணி முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

நேர்காணலுக்கு திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த நேர்காணல் குறித்த தகவல் குறுஞ்செய்தி  மூலம் தெரிவிக்கப்படும் என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.