tamilnadu

12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குக.... அறிவியல் இயக்கம் அரசுக்கு கோரிக்கை....

சென்னை:
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்ரமணியன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:

“சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து” என்னும் நிலைப்பாடு, மாணவர்கள் நலன், பெருந்தொற்று ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப் பட்ட முடிவு அல்ல. புதிய கல்விக் கொள்கையின் அடிப் படையில், உயர் கல்வி சேர்க்கை நடைமுறைகள்  முழுவதையும் நுழைவுத் தேர்வுகளின் கீழ் கொண்டு வருதல் என்ற மத்திய அரசின் நோக்கை துரிதப் படுத்துவதற்கான  நடவடிக்கையும் ஆகும்.தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்வி தவிர, இதர அனைத்து உயர் கல்வி சேர்க்கையும் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. எனவே, அந்த சேர்க்கையை தமிழ் நாடு அரசு எவ்வாறு நடத்தப் போகிறதுஎன்பதைப் பொறுத்தே  12ஆம் வகுப்பு தேர்வுகளின் மீது தமிழ்நாடு அரசு தனது முடிவுகளை மேற்கொள்ள வேண் டும்.

ஆய்வு முடிவுகள்..
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டுமா? வேண்டாமா? என தமிழக பொதுமக்கள், பெற்றோர் கள்,  மாணவர்களிடையே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இணையவழியில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி பிற்பகல் 12 மணி வரையிலும்  நடைபெற்ற ஆய்வில் 5193 பேர் பங்கு பெற்றனர். இந்தக் கருத்துக் கணிப்பின் அடிப் படையில், 61.4  விழுக்காடு மக்கள், தேர்வுகள் வேண்டாம் என்றும் 38.6 விழுக்காடு தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
எதற்காக 12ஆம் வகுப்பு மதிப் பெண்கள் தேவை என்ற கேள்விக்கு  உயர் கல்வி சேர்க்கைக்கு என 80.7 விழுக்காட்டினரும் 19.3 விழுக்காட்டினர் வேலை வாய்ப்புக்கு என்றும் இதே மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் இருந்து, 61.4 விழுக்காடு இன்றைய சூழலில் தேர்வுகள் தேவையில்லை. அதே சமயம், 80.7 விழுக்காடு உயர் கல்வி சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம்  என்பதையும் உணர்ந்து உள்ளனர் என்பது தெரியவருகிறது.பெருந்தொற்று காலத்தில், அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என 69.7 விழுக்காட்டினரும் இதுவரை நடந்த தேர்வுகள் அடிப் படையில் தேர்ச்சி இருக்க வேண்டும் என 30.3 விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்தக் கருத்துக் கணிப்பு மற்றும் மாணவர்களின் எதிர்காலம், பெருந் தொற்று கால அசாதாரண சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கீழ்  காணும் முடிவுகளை  தமிழ்நாடு அரசின் பரிசீலனைக்கு வைக்கிறது.

அரசின் தலையாய கடமை!
தமிழக அரசு இப்போதைக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டியதில்லை. முதலில் செய்ய வேண்டியது அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கி லட்சக்கணக்கான மாணவர்களையும் குடும்பங்களையும் நீண்ட கால மன அழுத்தத்தில் இருந்து மீட்பதே ஆகும்.தேர்ச்சி வழங்கும் போது 11ஆம் வகுப்பு அகமதிப்பீட்டு மதிப்பெண் கள், 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப் பெண்கள் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை தீர்மானம் செய்யலாம். அதேசமயம், அனைவரது தேர்ச்சியையும் உத்தரவாதம் செய்யும் வகையில் அது அமைய  வேண்டும். “இது தொடர்பான அரசின் முடிவில் சமூக நீதியே அடிநாதமாக இருக்க வேண்டும்.”

யாருக்கு தேர்வு நடத்தலாம்?
கால்நடை மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற துறைகளின் சேர்க்கைக்கும் அதேசமயம், முந்தைய மதிப்பீட்டில் தங்களுக்கு மதிப்பெண்கள் போதாது என்று நினைப் போருக்கும், 12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம். இந்த தேர்வுகளின் நேரம், பாடத்திட்டம் மற்றும் கேள்வித்தாள் முறை, தேர்வு மையங்கள் ஆகியவற்றை பெருந் தொற்று சூழலுக்கு ஏதுவாக அரசு  மாற்றி அமைக்கலாம்.மதிப்பீட்டு உத்திகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக, பல்வேறு தருணங்களில் பல்வேறு வல்லுநர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். குறிப்பாக   தமிழக அரசு அமைத்த கல்வியாளர் பேரா. ஆனந்த கிருஷ் ணன் தலைமையிலான வல்லுநர் குழுவும் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மதிப்பீட்டு உத்திகளை மாற்றி அமைக்க வேண்டும்.

சிபிஎஸ்இ வாரியம் இத்தகைய முடிவுகளை எடுக்கும் போது மாநில தேர்வு வாரியங்களையும்  கலந்து ஆலோசனை செய்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்.  தனது முடிவுகள் வழியாக மாநில தேர்வு வாரியங்கள் மீது  அழுத்தம் தரக்கூடாது என்பதை மத்திய அரசுக்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.மாணவர்களுக்கான ஆலோசனை மையங்கள் தொடங்க வேண் டும். தற்போதைக்கு தொலைபேசி, இணையதளம் மூலமாக செயல் படுத்தலாம்.இவ்வாறு சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

;