tamilnadu

img

ஓபிஎஸ் தகுதி நீக்க வழக்கு: விரைவில் விசாரணை

புதுதில்லி:
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள்  தகுதிநீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்ட மன்றத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக வின் தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.இதனையடுத்து திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள்  தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு விரைவில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  வழக்கை விசாரிக்க புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;