பல்லாவரம், ஆக.29- அனகாபுத்தூர் நகராட்சி யில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. அவற்றில், ஆயிரக்கணக்கான பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் முறையாக துப்புரவு பணிகளை மேற்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தெருவெங்கும் குப்பைகள் மலைபோல் தேங்கி காட்சியளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘அனகாபுத்தூர் பகுதி எங்கும் துப்புரவு பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சமீப காலமாக ஒப்பந்த தாரர்கள் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை. அதன் விளைவாக துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு நியாயமான கூலி கிடைக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். ஆனா லும், நகராட்சி நிர்வாக ஆணையாளர் கண்டு கொள்ளாமல், தனியார் ஒப்பந்ததாரரிடம் இருந்து கமிஷன் தொகை பெறுவ தில் மட்டுமே குறியாக உள்ளனர்” என்றனர். கடந்த ஆண்டு மழைக்காலத்தின்போது அனகாபுத்தூர், பம்மல் மற்றும் பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தான் சுகாதார மின்மை காரணமாக டெங்கு நோய் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு அனகாபுத்தூர் பகுதிகளில் குறிப்பாக காமராஜர் பிரதான சாலை யில் தேங்கியுள்ள குப்பை களை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தி நோய்கள் பரவுவதில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.