tamilnadu

img

விமான டிக்கெட் விலையில் ஆம்னி பேருந்து டிக்கெட்

விமான டிக்கெட் விலையில் ஆம்னி பேருந்து டிக்கெட்

தீபாவளியை பயன்படுத்தி  கட்டணக்கொள்ளை

சென்னை,அக்.23-  தீபாவளி பண்டிகையைப் பயன்படுத்தி விமான டிக்கெட் விலையில் ஆம்னி பேருந்து டிக்கெட் உயர்த்தப்பட்டு கட்டணக்கொள்ளை நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகையை  கொண்டாட  சென்னையில் தங்கியுள்ள வெளி மாவட்டத் தினர் சொந்த ஊர்  செல்வதற்காக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 10,940 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  இந்நிலை யில்  சென்னையிலிருந்து பல முக்கிய நகரங் களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்து சேவைகளின் டிக்கெட் கட்டணம்  பல சந்தர்ப்பங்களில் சராசரி டிக்கெட் விலையை விட நூறு சதவீதம் உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து சேலம் செல்லும் ஏசி அல்லாத சிலீப்பர் பேருந்தில்  ரூ.500 ஆக இருந்த  கட்டணம் வெள்ளிக்கிழமை ரூ. 1,570  ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் மற்றும் மக்கள் கூறுகையில், தீபாவளி வார இறுதியில் கோவை மற்றும் மதுரைக்கான  டிக்கெட்டுகள்  விமான டிக்கெட்டுகளை விட அதிகமாக உள்ளன.  இது ஒரு தொடர்ச்சியான பிரச்சனை யாக உள்ளது. போக்குவரத்துத் துறையால் வழங்கப்பட்ட ஹெல்ப்லைன் எப்போதாவது தான் செயலில் உள்ளது என்று கூறினர்.  ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் விதிமுறை களை மீறி இயக்கி வருகின்றனர். ஆனால் அவர்கள் தண்டனையின்றி தப்பித்து  வருகின்ற னர். ஒப்பந்த வண்டிக்கான டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லாத தால், விலையை கட்டுப்படுத்துவதில் நிர்வாகத் திற்கு சில தடைகள் உள்ளன.   எங்கள் கட்டண மில்லா போன் செயலில் உள்ளது. பண்டிகை காலங்களில் முக்கியமாக ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்ட ணம் வசூலிப்பதை சரி பார்க்க சோதனை நடத்து வதற்காக 60 குழுக்களையும் ஏற்படுத்தி உள்ளோம். தீபாவளி வார இறுதியில் அரசுபேருந்து சேவைகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளோம். தனியார் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு பதிலாக அரசு பேருந்து களை பயன்படுத்துமாறு பொதுமக்களை ஊக்குவிக்கிறோம் என்று போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

;