tamilnadu

img

சத்துணவு முட்டை உரிக்க இயந்திரம்

சென்னை, ஆக. 22 - தமிழ்நாட்டில் சத்து ணவுத் திட்டத்தின் கீழ் 1  முதல் 5 ஆம் வகுப்பு வரை யிலான 20 லட்சத்து 74 ஆயி ரத்து 39 மாணவர்களும், நடு நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 21 லட்சத்து 97 ஆயிரத்து 914 மாணவர்களும் பயன டைந்து வருகின்றனர்.

இதில், 43 ஆயிரத்து 131  சத்துணவு மையங்கள் மூலம் 5 வகையான கலவை சாதங் களுடன் மசாலா முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதிகமான மாணவர்கள் பயிலும் மை யங்களில் முட்டை உரிப்ப தில் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள்.  குறிப்பாக, தமிழ்நாட்டில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500  பயனாளிகளுக்கு மேல்  உள்ளனர். இந்த மையங் களைச் சேர்ந்த பணியாளர் கள் தினமும் 500 முட்டை களுக்கு மேல் வேக வைத்து அவற்றை உரிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் சிரமங் களை சந்திக்கின்றன. சில  நேரங்களில், மாணவர் களுக்கு முட்டைகள் உடை ந்து வீணாகி வருகின்றன.

மேலும், சுகாதாரத்தை யும் உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதன்காரண மாக, அதிக அளவு பயனாளி களை கொண்ட 431 பள்ளி சத்துணவு மையங்களுக்கு நவீன முட்டை உரிக்கும் இயந்திரம் வாங்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து இயந்திரம் கொள் முதல் செய்வதற்கான அனு மதி கோரி தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள் ளது. கூடிய விரைவில், இதற்கான அனுமதி கிடைத்து விடும். 

அதன்பிறகு, டெண்டர் விடப்பட்டு, முட்டை உரிக்கும் இயந்திரம் சத்துணவு மையங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும். இந்த இயந்திரம் பயன்பாட்டு வந்தால், சத்து ணவு பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.