சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும், அரசு ஊழியர்களைப் போன்றே ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தக்கூடாது என வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 7) ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.கேசவன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சுகந்தி, செயற்குழு உறுப்பினர் ஜெ.ரமணி உள்ளிட்டோர் பேசினர்.