tamilnadu

img

வடசென்னை மற்றும் தென்சென்னை வேட்பாளர் பிரச்சாரம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரம ராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகர், வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் கலாநிதி ஆகியோருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடை வீதிகளில் பிரச்சாரம் செய்தனர்.


தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு வாக்கு கேட்டு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தரமணியில் உள்ள தேவாலயத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது அருட்தந்தை போஸ்கோ-விடம் அமைப்பின் மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.ரபீக் உள்ளிட்டோர் துண்டுபிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தனர்.


தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதி சார்பில் 6 மையங்களில் வீடுவீடாக பிரச்சாரம் செய்தனர். 182வது வட்டம், திருவள்ளுவர் நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தை பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி தொடங்கி வைத்தார்.

;