tamilnadu

img

நொச்சிக்குப்பம் லூப் சாலை மீன் கடைகளை அகற்றாதே

சென்னை, டிச. 10 - சென்னை மெரினா கடற்கரையில் பாரம்பரிய மீன் கடைகளை அகற்ற அரசு முயற்சித்து வருகிறது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு மீன்பிடி தொழி லாளர்கள் சங்கம் சார்பில் திங்களன்று (டிச.9) நொச்சிக்குப்பத்தில் கண்ட னக் கூட்டம் நடைபெற்றது. நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீன் வியாபாரம் செய்வோருக்கு புதிதாக கடைகள் கட்டித்தருவதோடு மீன் பதப்படுத்தும் அறை ஒன்று அமைக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதா ரத்தை பறிக்கும் தேசிய கடல் மீன்பிடி மசோதா 2019ஐ கைவிட வேண்டும், மீன்பிடி படகுகளுக்கான மானிய விலை டீசல் பங்க்-கை நொச்சிக்குப்பத்திற்கு அருகாமையில் அமைக்க வேண்டும், மீனவர்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும், மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர். மாவட்டத் தலைவர் ஜெ.அன்புரோஸ் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்ட த்தில், சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் க. பீம்ராவ், தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எஸ். அந்தோணி, பொருளாளர் ஆர்.லோகநாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெய சங்கரன், தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் கு.பாரதி,தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலை வர் கபடி பி. மாறன், மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலை வர் ச. ரூபேஸ்குமார், சிங்கார வேலர் கருத்தியல் திறவாளர் கவிஞர் பிஜி. ஆனந்தன், சிபிஐ-எம் மயிலை பகுதி செயலாளர் ஆர். ரவி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு நிர்வாகி கள் எஸ். எத்திராஜ், கே. ரஞ்சித்குமார், எம். முருகன் உள்ளிட்டோர் பேசினர்.