tamilnadu

தொழிலாளர்களுக்கு சாதகமான வழக்குகளில் மேல்முறையீடு கூடாது

சென்னை, ஜூன் 21 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது நடை பெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் சட்ட மன்றக்குழுத் தலைவர் நாகை மாலி பேசி யது வருமாறு:-

சங்கம் சேருவது உரிமை

தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை, கூட்டுப்பேர உரிமை, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமைகளை உறுதி செய்திட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதி களில் இயங்கி வரும்உள்நாட்டு மற்றும் பன்னாட்டு  நிறுவனங்கள் தொழிற்சங்கத்தை ஏற்க மறுத்து சங்க முன்னணி ஊழியர்கள் மீது பணிநீக்கம், பணியிடை நீக்கம், பணியிட பாகுபாடு, ஊர்மாற்றம், சம்பளப் பிடித்தம் போன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடு கின்றன. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், படப்பை, மறைமலை நகர் உள்ளிட்ட தொழில் பகுதிகளில் இத்த கைய தொழிற்சங்க விரோத நடவடிக்கை கள் உள்ளன என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

முத்தரப்பு குழுக்கள் இல்லாத வாரியங்கள்

மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உள்ளிட்ட சட்டப்பூர்வமான தொழிலாளர் முத்தரப்பு குழுக்கள் முழுமையாக அமைக்கப்படவில்லை.  குறிப்பாக இ.எஸ்.ஐ. வருங்கால வைப்பு நிதி குழுக்கள் அமைக்கப்படாமல் உள் ளன. மேலும் கட்டுமானம், உடல் உழைப்பு உள்ளிட்ட அமைப்பு சாரா நல வாரியங்களுக்கான தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் தொழிற்சங்கங்களால் பரிந்துரை செய்யப்பட்டும், கட்டுமானம், பனைமரம், பட்டாசு வாரியங்களை தவிர இதர வாரியங்கள் அமைக்கப்படவில்லை என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மாற்றி அமைக்கப்படாத குறைந்தபட்ச ஊதியம்

தமிழ்நாடு அரசு அட்டவணைப்படுத்தி யுள்ள தொழில்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆனால், பல தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப் படாமல் உள்ளது. இதனால் ஏறிவரும் விலைவாசி உயர்வை ஈடுசெய்ய முடியா மல் தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். 

புதிய தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக் குழுக்களின் பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பி அர சாணை வெளியிட்ட பிறகும் நிர்வாகங் கள் அமலாக்க மறுக்கின்றன. 

குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப்பணி தொழி லாளருக்கான குறைந்தபட்ச ஊதியம், தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்ண யித்த குறைந்தபட்ச ஊதியம், பனியன் தொழிலுக்கு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம், தனியார் மருத்துவமனை தொழிலுக்கு நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஊதியம்- இவையெல்லாம் அதிகம் என்று கூறி, அவற்றைத் தர முதலாளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறைந்த பட்ச ஊதியத்துக்கான முத்தரப்புக் குழுக்களின் முடிவுகளை ஏற்று வெளி யிடப்பட்ட அரசாணைகள் மாநிலம் முழு வதும் அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பெருகும் ஒப்பந்த தொழிலாளர் முறை

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெருகி வரும் ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு முடிவு கட்ட வேண்டும். பெரும்பாலான நிறுவனங் களில் குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்த  தொழிலாளர் (நீக்குதல்-முறைப்படுத் தல்) சட்டம், பணிநிரந்தரத் தகுதி வழங்குதல் சட்டம், கடைகள் மற்றும் நிறு வனங்கள் சட்டம், 8 மணி நேர வேலை,  மிகைநேர ஊதியச் சட்டம், சமவேலைக்கு சம ஊதியம், வார விடுமுறைச் சட்டம், தேசியப் பண்டிகை விடுமுறை சட்டம்,  வேலையாள் இழப்பீட்டு சட்டம், பணிக் கொடை, மகப்பேறு சட்டம் உள்ளிட்ட  தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப் படுவதில்லை. தொழிலாளர் துறையின் அமலாக்கப் பிரிவு, தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதாரம் இயக்கக அம லாக்க பிரிவு ஆகிய பிரிவுகள் தனிக் கவ னம் செலுத்தி தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப் படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்

சமீப காலத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துகளில் அப்பாவித் தொழிலாளர்கள் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தொழில் நிறுவனங் களில் பணியிடப் பாதுகாப்பு மற்றும் தொழில் ரீதியிலான நோய்கள் மற்றும் விபத்துக்களில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உரிய தலையீட்டையும், கண்காணிப்பையும் அமலாக்கம் செய்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

காலிப் பணியிடங்கள்

தொழிலாளர் ஆணையரகம், தொழி லாளர் ஆய்வாளர், தொழிலாளர் அலு வலர் மற்றும் உதவி ஆணையர், துணை ஆணையர் அலுவலகங்கள், கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத் தலைமை அலுவலகங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் அலுவலகங்களில் போது மான எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லை. இதனால், தொழிலாளர் நல  நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப் படுகின்றன. ஆகவே, இந்த பணியிடங் களை நிரப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் 

நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முறைசாரா தொழி லாளர்களின் நலனில் அக்கறை கொண்ட  அரசாக நமது அரசு செயல்பட்டு வரு கிறது. இந்த அரசு வீடு தேடி உணவு தரும் பணியில் ஈடுபட்டுள்ள கிக் ஒர்க்கருக்கு தனி நல வாரியம் அமைத்துள்ளது வர வேற்கத்தக்கது. 

அதே நேரத்தில் முந்தைய ஆட்சி யில் இந்த நல வாரியங்களில் தொழி லாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் பணப்பயன் கேட்புக்கும் என இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் முறையை அவசர கதியில் நடைமுறைப்படுத்தியது.

தற்போது இணைய தள பதிவு களில் தொழிலாளர்களின் பதிவேற்றம் செய்யப்பட்ட  ஆவணங்கள் அழிந்து விட்டதாக கூறி மறுபடியும் ஆவணங் களை பதிவேற்றம் செய்யும்படி அதி காரிகள் கூறி வருகின்றனர். இதனால் கிராமப்புற படிப்பறிவற்ற தொழிலாளர் கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலதாமதமாகும் பணப்பயன்கள்

கட்டுமான நல வாரியத்தில் உடனுக்கு டன் பணப்பயன்கள் வழங்கப்படு கின்றன. ஆனால் உடல் உழைப்பு மற்றும் தொழில் வாரியான நல வாரியங்களில் பணப்பயன்கள் பெறுவது காலதாமத மாகிறது. இதற்கு அரசு நிதி ஒதுக்காமல் இருப்பதே காரணம் என்று சொல்லப்படு கிறது. 

தொழிலாளர் நலனின் அக்கறை கொண்ட இந்த அரசு முறைசாரா தொழி லாளர்கள் நலவாரியச் செயல்பாடுகளில் உள்ள பலகீனங்களை களைந்தும், முறைப்படுத்திடவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீதிமன்ற வழக்குகளில் தொழி லாளர்களுக்கு சாதகமாக பிறப்பிக்கப் படும் உத்தரவுகளை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்யாது என்பது முந்தைய திமுக அரசின் நிலைபாடாகும். ஆனால் இந்த ஆட்சியில் தொழி லாளருக்கு சாதகமாக வரும் நீதிமன்ற  உத்தரவுகளை எதிர்த்து மேல்முறை யீடு செய்யப்படுவதை கைவிட வேண்டும். மேல்முறையீட்டு வழக்குகளை திரும்பப் பெற்று உத்தரவுகளை அமலாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தொழிற்தாவாக்களின் மீதான விசார ணை மற்றும் முடிவுக்கு குறிப்பிட்ட காலம் நிர்ணயம் செய்ய வேண்டும் 

இவ்வாறு நாகை மாலி எம்எல்ஏ தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.