tamilnadu

img

நெட்வொர்க் செயல்திறன் : புதிய வரைபடம் தயார்

 சென்னை:
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க் செயல்திறன் குறித்து செல்போன் பயன்படுத்தும் சந்தாதாரர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் புதிய வரைபடம் இன்னும் சிலவாரங்களில் செயல்பாட்டுக்குவரும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க் செயல்திறன் குறித்த விவரத்தை டிராயின் இணையதளம் வாயிலாக சந்தாதாரர்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் குறிப்பிட்ட எந்த பகுதியில் ஒரு நிறுவனத்தின் நெட்வொர்க் சேவை வலிமையாக அல்லது பலவீனமாக இருக்கிறது என்பதை சந்தாதாரர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்தார்.

அதற்கான தகவல்களைப் பெற்று வருவதாகவும், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவை எந்ததரத்தில் இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஷர்மா கூறினார்.

;