சென்னை, மார்ச் 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்துர் பகுதிக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளருமான என்.சாந்தி யின் தாயார் லலிதா ஞாயி றன்று (மார்ச் 1) காலமானார். அவருக்கு வயது 87. அண்ணாநகர் மேற்கு, 13வது பிரதான சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் பா.ஜான்சிராணி, தென் சென்னை மாவட்டச் செயலா ளர்கள் ஏ.பாக்கியம், மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், வி.தனலட்சுமி, ஆலந்தூர் பகுதிச் செய லாளர் எஸ்.அரிகிருஷ்ணன், அண்ணாநகர் பகுதிச் செயலாளர் பி.சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொதுச் செயலா ளர் எஸ்.நம்புராஜன் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்பு களின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னாரது உடல் ஊர்வல மாகக் கொண்டு செல்லப் பட்டு சிட்கோ நகர் மயானத் தில் தகனம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.நந்தகோபாலின் மாமியார் லலிதா என்பது குறிப்பிடத்தக் கது.