tamilnadu

img

தரம் பிரித்து குப்பைகளை வழங்கும் நபர்களுக்கு நகராட்சி பரிசு

காஞ்சிபுரம், டிச.28- மக்கும் குப்பை மக்காத குப்பை எனக்  குப்பைகளைத் தரம் பிரித்து,வீதி தோறும்  வரும் துப்புரவுப் பணியாளரிடம் வழங்கும்  இல்லத்தரசிகளுக்கு வாரம் தோறும் பரிசு  வழங்கும் புதிய திட்டத்தை காஞ்சிபுரம்  பெரு நகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். அதன்பேரில் 12 நபர்களுக்கு நகராட்சியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 51 வார்டு கள் உள்ளது.பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுத்தால் வாரம் தோறும் 12 பேருக்குப் பரிசுகள் வழங்க இருப்பதாக காஞ்சிபுரம் பெருநகராட்சி  ஆணையர்  ரா. மகேஸ்வரி  அறிவித்திருந்தார். பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் காஞ்சிபுரம் நகரத்திற்குள் குப்பை கொட்டும்  இடங்களில் வண்ண வண்ணக் கோலங்கள்  போட்டு குப்பைகளைச் சாலையில் கொட்டாத வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துப்பு ரவுப் பணியாளர்கள் வரும்போது குப்பை களைத் தரம் பிரித்து வழங்கும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தும் நபர்களுக்கு வியா ழக்கிழமை (டிச.26) பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டது. இது குறித்து ஆணையர் மகேஸ்வரி கூறும்போது ,திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேம்படுத்தவும், தூய்மையான நகரத்தை உருவாக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுப்போருக்கு வாரம் தோறும் பரிசு வழங்கப்படும் என்றும், நக ராட்சியில் 51 வார்டுகளை உள்ளடக்கிய 6  கோட்டங்களிலும் சுமார் 2 லட்சத்து 32 ஆயி ரம் மக்கள் வசிக்கின்றனர். நாளொன்றுக்கு 62 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதில்  30 டன் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுகி றோம். மக்கும் குப்பை மக்காத குப்பை எனத்  தரம் பிரித்து அளிக்க வலியுறுத்தி வருகி றோம். இதனை முன்னிட்டு ஒரு கோட்டத்துக்கு  இருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மொத்தம் 12 பேருக்குப் பரிசுகள்  வழங்கி வருகிறோம் என்றார்.

;