tamilnadu

img

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை, செப்.13-  மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையிலிருந்து செல்வதற்குக் குறைந்தபட்சம் ரூ.2000 முதல் ரூ.4500 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை முதல் கோவை வரை செல்ல ரூ.2500 முதல் ரூ.4500 வரையும், சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்ல ரூ.2500 முதல் ரூ.4500 வரையும், சென்னை முதல் திருநெல்வேலி வரை செல்ல ரூ.2000 முதல் 4200 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
தொடர் விடுமுறையை சாதகமாகப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.