புதுச்சேரி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன்
மருத்துவமனையில் புதிய எம்.ஆர். ஐ ஸ்கேன் இயந்திரத்தை முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன் உட்பட மருத்துவர்கள் பங்கேற்றனர்.