tamilnadu

ஏழைகளுக்கு எதுவும் செய்யாத மோடி ஆட்சி அ.சவுந்தரராசன் காட்டம்

சென்னை,அக்,16- மத்திய , மாநில அரசுகளின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி, இந்தியகம்யூனிஸ்கட்சி, சிபிஐ எம்எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதனன்று (ஆக்16) கொட்டும் மழையை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் செய்தனர். சிபிஐ வடசென்னை மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிபிஎம் மாநிலசெயற்குழு உறுப்பி னர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “இந்தியா முழுவதும் இதுவரை காணாதஅளவிற்கு கடுமையான பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள தால் ஏராளமான தொழிற்சாலைகள், சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், பொதுத்துறைகளை பாதுகாக்கவும் முடியாத கேவல மான நிலைக்கு மத்தியஅரசு போய்விட்டது. லாபம் மட்டுமே நோக்கமாக கொண்டு தொழில்வளர்ச்சிக்கு உதவாத கார்ப்ரேட்டுகளுக்கு மோடி உதவி வருவது வெட்ககேடாக இருக்கிறது” என்றார். இந்தியாவின் கட்டமைப்புச்செல வுகளுக்காக ரிசர்வ்வங்கி பணத்தை எடுத்து செலவு செய்வதாக கூறி முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கிவருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்காமல் எந்த திட்டமும் பலனளிக்காது. பொரு ளாதார வளர்ச்சியை பற்றி அக்கரை செலுத்தாமல் யுத்தம், எல்லை பிரச்சனை என மக்களுக்கு சம்மந்தம் இல்லாதவற்றை மத்திய அரசு செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். மோடி அரசியல் தற்குறி என்பதை தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிரூபித்து வருகிறார். செல்வத்தை உருவாக்குபர்களை ஊக்குவிக்க வேண்டும் என கூறும் மோடி, அதானி, அம்பானி, டாட்டா, பிர்லா ஆகி யோரை மேலும் வளம்கொழி க்கச்செய்கிறார். செல்வத்தை உருவாக்கும் பிரம்மாவை போன்ற உழைப்பாளியை புறக்கணிப்பவரை தற்குறி என்று தானே சொல்லத் தோன்றுகிறது. தேசவிரோத சட்டங்களை இடதுசாரிகளின் மீது சுமத்தும் மத்திய மோடி அரசை வீழ்த்துவோம் என்றும் சவுந்தரராசன் கூறினார். சிபிஐ மாநிலத்துணைச்செய லாளர் மூ.வீரபாண்டியன் பேசுகை யில், “தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரு கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூகநலத்துறை, சுகா தாரத்துறை செயலிழந்து முடங்கி க்கிடக்கிறது. முடியுற்ற நோயாகக்கருதப்படும் காலரா, பெரியம்மைநோய்கள் மீண்டும் புத்துயிர்பெற்று வந்துகொண்டு இருக்கின்றன. உயிர் கொல்லி நோய்களை தடுக்கத்தவறிய ஆட்சியாளர்களுக்கு இடை த்தேர்தல் மட்டுமே முக்கியமாக தெரிகிறது”என்றார். சிபிஐஎம்எல் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.கே. நடராஜன், “கிராமப்புறத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாள் வேலைத் திட்டமாகவும், குறைந்த பட்ட சம்பளத்தை ரூ.21 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசாங்கம் சாமான்ய ஏழை எளிய மக்களுக்காக ஆட்சி செய்யவேண்டும், இடது சாரிகளின் ஒன்றுபட்ட போராட்டம் இடதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தும் நல்ல அரசியல் மாற்றத்தை இடதுசாரிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தும்”என்றார். சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், சிபிஐ தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;