tamilnadu

img

நடமாடும் தொழில்நுட்ப  நிலையம் துவக்கம் 

 சென்னை,ஆக.3- நடமாடும் தொழில்நுட்ப நிலையம் சென்னையில் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தொழில்நுட்ப நாளை முன்னிட்டு இது தொடங்கப்பட்டது. 45 அடி நீளமுள்ள அதிநவீன நடமாடும் தொழில்நுட்ப நிலையம் பொதுத்துறை நிறுவனங்கள், ஆட்டோமொபைல், உற்பத்தி, சிமென்ட், உள்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில்களின் சேவை குழுக்களை சென்றடையும். நாட்டின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்காற்றி வரும் தமிழகம், வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், உற்பத்தி, சிமென்ட், பொறியியல், கட்டுமானம் மற்றும் உள்கட்ட மைப்பு உள்ளிட்ட பல முக்கிய தொழில்களின் தாயகமாகும். எனவே இந்த தொழில்நிறுவனங்களுக்கு தரமான சேவை மற்றும் தொழில்நுட்பங்களை வழங்க இந்த நடமாடும் வாகனம் உதவும் என்று இதனை நிர்மாணித்துள்ள ஈட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சான்டர் ஆலம் தெரிவித்துள்ளார்.