அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
சென்னை, ஜூலை 31- தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில், துறைசார் அலு வல்களிலும் ஓய்வு இல்லா மல் பங்கேற்று வந்தார். இந்நி லையில், கடந்த சில நாட் களாக காய்ச்ச லால் அவதிப் பட்டு வந்த அவருக்கு காய்ச்சல் அதி கரித்தது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.
அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வயநாடு பாதிப்பு தமிழ்நாடு காங். ரூ.1 கோடி நிவாரணம்
சென்னை, ஜூலை 31 - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத அதி கடும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு பாதிப்பால் 167 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்பதற்காக கேரள மாநில அரசு நிர்வாகம் ராணுவ உதவிக்குழு மற்றும் இதர மாநில பேரிடர் மீட்புக்குழுக்களோடு மீட்புப் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ரூபாய் 1 கோடி கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு தலைவர் ராகுல் காந்தி மூலம் காசோலை வழங்கப்படும்” என்றார்.
சிக்குன் குனியா காய்ச்சல் மீண்டும் பரவுகிறது
சென்னை, ஜூலை 31- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சிக்குன் குனியா காய்ச்சல் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது.
கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி, உடல் சோர்வு ஆகியவை இதன் அறிகுறி களாகும். சிக்குன் குனியா நோய் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக. 21 மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வு
சென்னை, ஜூலை 31- 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும் சிபிஎஸ்இ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் புதன் கிழமை (ஜூலை 31) காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க லாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை யில் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனை சார்ந்த அரசு பள்ளி, மருத்துவக் கல்லூரி கள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ww.tnmedicalselction.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், ஆகஸ்ட் 8 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்”என்றார். ஒன்றிய அரசு நாடு முழுவதும் இந்த முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் மருத்துவ படிப்பு களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்க உள்ளது; தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 9,050 இடங்கள் உள்ளன. 21 தனியார் கல் லூரிகளில் 3,400 மருத்துவ இடங்கள் உள்ளன. 2,200 பல் மருத்துவ இடங்கள் உள்ளன, இதில் 200 அரசு இடங்கள் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்
சென்னை, ஜூலை 31 - சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுவ தாகவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நோட்டீஸ்க்கு பதிலளிக்கவும், சட்டமன்ற விதிகளின்படி உரிமைக்குழு விசாரணையை விரைவில் முடித்து இறுதி முடிவெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.