tamilnadu

img

மெட்ரோ ரயில் 2ஆம் கட்டம்: ஓட்டேரி வந்த ‘ஆனைமலை’ இயந்திரம்

சென்னை, ஜூன் 14- சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத்தில்  ஆனைமலை சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஓட்டேரி நிலை யத்தை வந்தடைந்துள்ளது.

சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டத்தில்  சுமார் ரூ. 63,246 கோடி செலவில், 116.1 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்கான மெட்ரோ கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்  சுரங்கப்பாதை பணிகளுக்காக மொத்தம்  23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒவ்வொன் றுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில்  ஆனைமலை இயந்திரம் (S98) வழித்தடம் 3இல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அயனாவரம் பேருந்து  நிலையத்திலிருந்து ஓட்டேரி நிலையத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி யது. கொன்னுர் நெடுஞ்சாலை வழியாக   சுரங்கம் தோண்டி 925 மீட்டர் நீளமுள்ள  ஓட்டேரி ரயில் நிலையத்தை வந்தடைந் துள்ளது.

;