tamilnadu

img

சென்னை மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குதலை கண்டித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.28 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்,  மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்க கூடாது, 'ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்க கூடாது. மாநகராட்சி பள்ளிகளை மூடக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆக.28) சென்னை மாநகராட்சி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்திய சென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), எல்.சுந்தர்ராஜன் (வடசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், பி.விமலா, ஆ.பிரியதர்ஷினி, எம்.சரஸ்வதி உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.