tamilnadu

img

சென்னையில் மாம்பழம் விற்பனை சூடுபிடித்தது

சென்னையில் மாம்பழம் விற்பனை  சூடுபிடித்தது

சென்னை, ஏப்.25- சென்னை கோயம்பேடு மார்க் கெட்டில் மாம்பழ விற்பனை விருவிரு ப்பாக நடைபெற்று வருகிறது. மாம்பழம் சீசன் கோடையில் அதிகரித்தாலும், ஜனவரி மாதம் முதலே சேலத்தில் இருந்து மல் கோவா, அல்போன்சா, இமாம்பசா, களப்பாடி போன்ற மாம்பழங்கள் வரத்து தொடங்கிவிடும். அடுத்த படியாக பிப்ரவரி, மார்ச் மாதங்க ளில் கேரளாவில் இருந்து பங்கனப் பள்ளி, செந்தூரா போன்ற மாம்ப ழங்கள் வரத்து அதிகரித்து விடும். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத் தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தென்காசி, தேனி, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இருந்து நாட்டு மாம்பழங்கள் வரத் தொடங்கிவிடும். இதனால் சீசன் களை கட்டும். மே மாதத்தில் ஆந்திரா, தெலங் கானா மாநிலங்களில் இருந்து மல் லிகா, ருமானி, ஜவாரி மாம்பழங் கள் வரத் தொடங்கும். அப்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்து மாம்பழங்களின் விலை இன்னும் குறையும். ஜூன், ஜூலை வரை மாம் பழம் சீசன் நீட்டிக்கும். இந்த ஆண்டு சேலம் மாவட்டப் பகுதிகளில் மாம்பழம் விளைச்சல் வழக்கத்தைவிட 10 விழுக்காடு அதி கரித்து உள்ளதால் மாம்பழங்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தற்போது கோயம்பேடு சந்தையில் ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங் கள் வருகின்றன.வரும் மே, ஜூன் மாதங்களில் இந்த மாம்பழம் வரத் தானது 250 டன் முதல் 350 டன் வரை  அதிகரிக்கும்.