“மனிதன் பாவங்களுக்கு அஞ்ச வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் நடைபெறாது. புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனைக்குரியது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்” என்று திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார்.