tamilnadu

சென்னை, காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

விளையாட்டு விபரீதமானது நாட்டுவெடி வெடித்ததில்  இளைஞரின் விரல்கள் துண்டிப்பு   
 சென்னை, அக். 28- தீபாவளியன்று இளைஞ ரின் கையில் நாட்டு வெடி  வெடித்ததில் அவருடைய கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல்களின் சில பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. குழந்  தைகள் முதல் முதியவர் கள் வரை அனைவரும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தீபாவளியைக் கொண்டாடி னர். இருந்தாலும், பட்டாசு வெடித்ததில் ஆங்காங்கே சிலருக்கு தீக்காயம் ஏற் பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை யின்போது பட்டாசுகளால் தீக்காயங்கள் நேரிட வாய்ப்பு கள் உள்ளதால், கீழ்ப்பாக் கம் அரசு பொது மருத்துவ மனையில் கடந்த வாரமே அதற்கென சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. தீக்காயங்களுக்கு 24 மணி  நேரமும் சிகிச்சை அளிப்ப தற்கான உரிய ஏற்பாடு களும், வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 31 பேர் அனுமதி  இந்நிலையில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் தீக்கா யம் ஏற்பட்டு 31 பேர் ஞாயிற்றுக்கிழமை கீழ்ப்பாக் கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் பெரும்பாலானோருக்கு லேசான தீக்காயம் என்ப தால் அவர்கள் சிகிச்சை பெற்று உடனடியாக வீடு  திரும்பினர். ஆனால், 7 பேருக்கு காயம் கடுமையான இருந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த 7 பேரில் ஒருவருக்கு, அவரது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவை பாதியாக துண் டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மூத்த மருத்துவர் ஒருவர்  கூறுகை யில் “அந்த இளைஞருக்கு ஏறத்தாழ 25 வயது இருக்கும்.  அவர் தனது ஒரு கையில்  நாட்டு வெடியை வைத்து,  வெடிப்பதற்கு முன் தூக்கி  ஏறிய முயன்றுள்ளார். ஆனால், துரதிருஷ்டவசமாக அது அவரது கையிலேயே வெடித்தது. இதனால், அவ ருடைய இரண்டு விரல்களில்  பலத்த காயம் ஏற்பட்டது” என்றார். மற்றவர்கள் பட்டாசை பற்ற வைத்த பிற கும் வெடிக்கவில்லை என்ப தால் அதை அருகில் சென்று காண முயன்றபோது தீக்கா யம் ஏற்பட்டுள்ளது என்றார்.

சென்னையில் மண்டல வாரியாக  விழிப்புணர்வு பிரச்சாரம் 
சென்னை, அக். 28- சென்னை மாநகராட்சி பள்ளி சுகாதார தூதுவர்கள் வீடியோவை வெளியிட்டு சென்னை மாநகராட்சி டிஜிட்டல் மற்றும் மண்டல வாரியாக விழிப்புணர்வு பிரச்சா ரத்தை துவக்கியுள்ளது. மழைக்கால நோய்களை தடுக்க வீடு களையும் வீதிகளையும் தூய்மையாக இருக்க  அந்த தூதுவர்கள் வேண்டுகோள் விடுத்துள்  ளனர். சுத்தமான சென்னை, சுகாதாரமான  சென்னையை வலியுறுத்தி அனைவரும் பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டி யதின் அவசியத்தையும் வீடுகளையும் வீதி களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்து மாநகராட்சி நிர்வாகம் மழைக்கால சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கி யுள்ளது. கடந்த மாதம் மாணவ சுகாதாரத் தூதர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்க ளுக்கு  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாணவ சுகாதார தூதர்கள் தங்கள் வசிக்கும்  பகுதிகளில் தூய்மை மற்றும் சுகாதாரம் பற்றிய பிரச்சாரத்தை, குறிப்பாக டெங்கு, தொற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ அனைத்து முன்னணி செய்தித் தொலைக்காட்சிகள் சென்னையிலுள்ள பிரதான திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப் பட்டுள்ளது.  பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறு நீர் மற்றும் மலம் கழித்தலை தவிர்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், வீடுகளில் கழிவு நீர் மற்றும் தூயநீர் தேங்காமல் ஒத்துழைப் போம், மழை நீரை சேகரிப்போம் ஆகிய வற்றை வலியுறுத்தி சென்னையில் உள்ள 15  மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 20,000 மாநக ராட்சிப் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்  கும் வீதிக்கு வீதி விழிப்புணர்வு பிரச்சாரம்  நடத்தவும் மாநகராட்சி  திட்டமிடப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு  வங்கியில் தீ விபத்து   
காஞ்சிபுரம்,அக்.28- காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் திங்க ளன்று (அக்.28)  அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள், பொருட்கள், கம்ப்யூட்டர்கள் முழுவதும் எரிந்து நாசம் ஆகின. காஞ்சிபுரம், காமராஜர் சாலையில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி யின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  தொடர் விடுமுறையை யொட்டி கடந்த வெள்ளிக் கிழமை மாலை பணி முடிந்த தும் வங்கியை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். திங்களன்று  அதிகாலை 5 மணியளவில் வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை  பார்த்து அதிர்ச்சி அடைந்த  காவலாளி வங்கி அதிகாரி களுக்கும், விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்திற்கும் தீய ணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். தக வல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர் கள் வங்கி ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வங்கியில் உள்ள கேஷியர் அறையில்  இருந்த முக்கிய ஆவணங் கள், பொருட்கள், கம்ப்யூட் டர்கள் முழுவதும் எரிந்து கிடந்தது. வங்கியின் ஒரு  பகுதியில் எரிந்து கொண்டி ருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவா மல் தடுக்கப்பட்டது. வங்கியில் நள்ளிரவே தீப்பிடித்து இருப்பதாக தெரிகிறது. இது உடனடி யாக காவலாளிக்கு தெரிய வில்லை. இன்று அதிகாலை தான் அவர் கரும்புகை வெளியே வருவதை பார்த்து  உள்ளார்.தீ பெரிய அளவில் பரவாததால் அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். வங்கியில் தீப்பிடித்தது பற்றி தெரிந்ததும் ஏராள மான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற் பட்டதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.