tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தை  இரண்டாகப் பிரிப்பது பாதகமே
சென்னை,டிச.23 சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தை, சீர்மிகு அண்ணா பல்கலை கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என்ற இருவேறு பல்கலைக்கழகங்களாக பிரிக்கும் அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சுமார் 540 இணைப்புக் கல்லூரிகளை கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தை ஒரே பெயரில் இரண்டாக பிரிப்பது பயன் தராது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி கருத்து தெரிவித்துள்ளார். வெவ்வேறு கல்வியாளர்களின் பெயர்களில் புதிதாக 10 -15 பல்கலைக்கழகங்களை உருவாக்கி பொறியியல் கல்லூரி களை தரம் உயர்த்தவும், ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் அவர். மத்திய அரசின் இந்த சிறப்பு அந்தஸ்து என்பது 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அதன் பின்னர் அதனை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறப்படு கிறது. அவ்வாறு இருக்கையில் சிறப்பு அந்தஸ்தை தக்கவைப்பதில் எதிர்காலத்தில் சிக்கல் உருவானால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்களின் மாத ஊதியம், பல்கலைக்கழகங்களின் பராமரிப்பு உள்ளிட்ட செலவீனங்க ளுக்கான நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகும் என்கிறார் அவர்.அண்ணா பல்கலைக்கழகம்தான் லட்சக்கணக்கான மாணவர்களின் பொறியியல் கனவுக்கு தொடர்ந்து உயிரூட்டி வருகிறது. அதனை பிரிக்கும்போது மாணவர்கள் நலன் நடுத்தர வர்க்க மாணவர்களின் பொறியியல் கனவுக்கு சமாதி கட்டப்படும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஜீ தொலைக்காட்சி அறிவிப்பு 
சென்னை,டிச. 23- ஜீ தொலைக்காட்சி அலைவரிசைகள் அனைத் திற்கும் ரூ.10 கட்டணம் செலுத்திய பின்னரும் அதை பார்க்க முடியவில்லை என்று பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஜீ தொலைக்காட்சி விடுத்துள்ள அறிக்கையில் ஜீ தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும், அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன், எஸ்.சி. வி, மற்றும் வி.கே டிஜிட்டல் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி டிடிஎச் ஆப்ரேட்டர்களிடமும் கிடைக்கும். மேலும் ஏர்டெல், டாடா ஸ்கை, டிஷ் டிவி,மற்றும் சன் டிரெக்ட் ஆகியவற்றிலும் கிடைக்கும். தனி சேனல்கள் மற்றும் சேனல் பேக்குகளின் வாடிக்கையாளர் விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. நேயர்கள் தங்கள் மாதாந்திர கட்டணத்தின் ஒரு பகுதியாக ரூ.10 ஏற்கனவே செலுத்தியிருந்தால்  உடனடி யாக கேபிள் ஆப்ப ரேட்டர்களை தொடர்பு கொண்டு, ஜீ சேனல்களை ரீஆக்டிவேட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளவும்.  இவ்வாறு ஜீ டிவி அறிவித்துள்ளது.