சென்னை, மே 22-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு, 2017-2018 ஆம் நிதியாண்டில் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.அதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும், நட்டம் 78 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், கூறப்படுகிறது. மின்சார விற்பனை மற்றும் விநியோகத்தின் மூலமான விற்பனை வருவாய், 2016-17ஆம் நிதியாண்டைக் காட்டிலும், 2017-18ஆம் நிதியாண்டில் 277 கோடி ரூபாய் சரிந்துள்ளது. மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அறிமுகப்படுத்திய, முதல் 100 யூனிட்டுகள் மின் சாரத்திற்கு கட்டணமில்லை என்ற திட்டத்தின் மூலம், மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு சற்று அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.மேலும், ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் நிலக்கரி விலை, மின் பகிர்மான கழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு, முக்கிய காரணிகளாக இருப்பதாகவும், கூறப்படுகிறது.