2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக கூட்டணி 290 இடங்களும், இந்தியா கூட்டணி 235 இடங்களும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவிகிதம் பின் வருமாறு:
திமுக (22) - 1,16,89,879 வாக்குகள் - 26.93%
காங்கிரஸ் (9) - 46,32,770 வாக்குகள் - 10.67%
சிபிஎம் (2) - 10,95,592 வாக்குகள் - 2.52%
சிபிஐ (2) - 9,32,954 வாக்குகள் - 2.15%
விசிக (2) - 9,82,117 வாக்குகள் - 2.25%
மதிமுக (1) - 5,42,213 - 1.25%
முஸ்லீம் லீக் (1) - 5,09,664 - 1.17%
அதிமுக (0) - 88,80,801 வாக்குகள் - 20.46%
பாஜக (0) - 48,80,954 வாக்குகள் - 11.24%
நாம் தமிழர் கட்சி (0) - 34,58,853 வாக்குகள் - 8.19%
நோட்டா (0) - 4,61,327 வாக்குகள் - 1.06%