tamilnadu

எல்ஐசி மேலாளர் தற்கொலை...

சென்னை:
எல்ஐசி நிறுவனத்தில் மாடியிலிருந்து குதித்து முதன்மை மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கீழ்ப்பாக்கம் ஈவேரா சாலையில் எல்ஐசி நிறுவன அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இங்கு வணிகம் பிரிவில் முதன்மை மேலாளராக ரகு என்பவர் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், செவ்வாயன்று பிற்பகல் 12 மணியளவில் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இவரின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது சக ஊழியர் மடியிலிருந்து கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து கீழ்ப் பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப் பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த காவலர் ரகுவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக் காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் ரகுவிற்கு 2 மாதத்திற்கு முன்பு புற்றுநோய் 4 ஆவது நிலை எட்டியுள்ளதாகவும், மேலும் இவரது தாயாரும் உடல் நிலை பாதிப்படைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதால் ரகு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது.ஆந்திரா மாநிலம் சித்தூரை பூர்வீகமாகக் கொண்ட ரகுவிற்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை எனத் தெரிய வந்தாலும், ரகுவின் மெயில் மற்றும் செல் போனை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.