tamilnadu

img

கோயம்பேடு தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கேட்டு கடிதம்

சென்னை, மே12-கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு போக்குவரத்துக் கழகத்துக்கு சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதி உள்ளது.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாநகர பேருந்துகளும், வெளியூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். கோயம்பேடு பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் (சி.எம்.டி.ஏ.) நிர்வகித்து வருகிறது.தனியார் ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அலுவலகங்களும் அங்கு செயல்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய அடுக்குமாடி நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சில பேருந்துகள் கே.கே.நகர் மாநகர போக்குவரத்து பணிமனைகளிலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தும் இடங்களில் நெருக்கடி குறைந்துள்ளது.இதற்கிடையே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு போக்குவரத்துக் கழகத்துக்கு சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதியுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றி தனியார் பேருந்துகள் இயக்கப்படு வதால் ஜவகர்லால் நேரு சாலை- காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் இடத்தில் 360 பேருந்து கள் மட்டுமே நிறுத்த வசதி உள்ளது. ஆனால் 1000ஆம்னி பேருந்து கள் இயக்கப்படுகின்றன. எனவே அங்கு நெரிசலைகுறைக்க தனியார் பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க முடிவு செய்துள்ளனர்.

;