tamilnadu

img

புதுச்சேரியில் இடதுசாரி கட்சிகள் போராட்டம்

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து புதுச் சேரியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள  2025-26 ஆண்டிற்கான பட்ஜெட் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதற்கோ,  வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கோ  எவ்விதமான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் அறிவிக் கப்படாத பட்ஜெட்டாகும். பெரும் முத லாளிகளுக்கு ஆதரவாக, தனியார் முதலீடுகளை மேம்படுத்துவது மூலம் செல்வம் பெருமளவில் ஒரு சில  இடங்களில் சேர்வதற்கே வழிவகுக் கும். நாட்டின் பொது சொத்துக்கள் தனி யார் துறையின் சேவகத்திற்கு மடை மாற்றம் செய்யும் பாஜக அரசின் மோசடி களை அம்பலப்படுத்தும் வகையில் சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  சிபிஎம் மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்  லெனினிஸ்ட்(எல்) கட்சி மாநிலச் செயலாளர்புருஷோத்தமன் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைவர்கள் ஆர்.ராஜாங்கம், வெ.பெருமாள், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், சீனுவாசன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, முன்னாள் அமைச்சர் விசுவநாதன், நாரா கலைநாதன்,சேது செல்வம், தினேஷ் பொன்னையா,  சுப்பையா, சோ.பாலசுப்ரமணியன், அருள், விஜயா  உட்பட திரளான இடதுசாரி கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக புதுச்சேரிக்கு மாற்று திட்டங்களை அமல்படுத்தகோரி கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர்.