சென்னை:
தமிழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கிவைத்தார்.கோவிட் - 19 வைரஸ் தொற்று காரணமாகவும், பொதுமக்கள் ஒன்று சேர்வதைத் தவிர்ப்பதற்காகவும், 2020-2021ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறைப் போன்றே அனைத்து சட்டப்படிப்பு சேர்க்கைக்கும் இணையதளம் மூலம் கலந்தாய்வுகள் நடத்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக 5 ஆண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் பட்டப்படிப்புகளுக்கு கட் - ஆப் மதிப்பெண்களின் அடிப் படையில் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பதற்கு ஏதுவாக பதிவேற்றம் செய்வதற்கான தகவல்கள் அவர்களது பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கும், குறுந்தகவல் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப்படிப்புகள், 5 ஆண்டு பி.ஏ.எல்எல்.பி. சட்டப்படிப்பிற்கு என நான்காயிரத்து 972 விண்ணப்பங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 311 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 373 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டு, நான்காயிரத்து 910 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இங்கு பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப்படிப்புகளுக்கான இணையவழி சட்டத் துறை அமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத் கர் சட்டப்பல்கலைக்கழக இணைவேந்தருமாகிய சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்.பின்னர் ஒவ்வொரு சட்டக்கல்வி பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையினையும் அமைச்சர் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாஸ்திரி ( சட்டம்), தமிழ்நாடு அரசின் சட்டத்துறைச் செயலர் கோபி. ரவிக்குமார், தமிழ்நாடு சட்டக்கல்வி இயக்குநர் முனைவர் சந் தோஷ்குமார், தமிழ்நாடு டாக்டர் அம்பேத் கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர், சீர்மிகு சட்டப்பள்ளியின் இயக்குநர், மேலும் சட்டக்கல்வி சேர்க்கைக்குழு உறுப் பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.