tamilnadu

சென்னைக்கு ஏன் மழை இல்லை?

சென்னை, ஜுன் 5-கடந்த 180 நாட்களாக தமிழகத்தின் தலைநகரான சென்னையை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை  அவ்வப்போது பெய்து வருகிறது. உண்மையில் கடந்த ஆண்டும்தொடர்ந்து 187 நாட்கள் சென்னை யில் மழை இல்லை. கடந்த 20 ஆண்டுகள் புள்ளி விவரத்தை பார்க்கும் போதும் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணங்களால் மட்டுமே சென்னையில் மழையை பார்க்க முடிந்துள்ளது.இதுகுறித்து ‘தமிழ்நாடு வெதர்மேன்’ தனது முகநூல் பக்க பதிவில் “சென்னையில் மழை பெய்ய வேண்டும் என்றால் வேலூர் மற்றும் நகரி மலைகளில் மேகங்கள் உரு வாகி அது சென்னை பக்கம் நகர்ந்து வர வேண்டும். ஆனால் இம்முறை உருவான மேகங்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி பக்கம் நகர்ந்து சென்றுள்ளன. இதனால் இம்முறை மட்டுமே வரும் நாட்களில் சென்னை மக்கள் மழை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கூடிய விரைவில் தென்மேற்கு பருவ மழை பெய்ய உள்ளது. சென்னையில் வெப்ப சலனம் காரணமாக முதல் மழை விரைவில் பெய்யும். ஆனால் நீரின் தேவையை தீர்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.