tamilnadu

img

தொழிலாளர் பிரச்சனைகளை விரிவாக விவாதித்த சிஐடியு மாநாடு

சென்னையில் நடைபெற்று வரும் சிஐடியு அகில இந்திய மாநாடு, நான்கு பெரும் தலைப்புகளில், இந்திய தொழிலாளர் வர்க்கம் சந்திக்கும் பிரச்சனைகளை விரிவாக அலசி ஆராய்ந்தது. பொதுச் செயலாளர் முன்வைத்த வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கை மீது மாநிலவாரியாக பிரதிநிதிகள் நடத்திய விவாதம் மட்டுமின்றி; 2000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் 4 ஆணையங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனி அமர்வுகளாக இந்த விவாதமும் நடைபெற்றது.

♦ தொழிலாளர் சட்டத்தை நெறிப்படுத்துதல் தொடர்பான ஆணையம், அதன் தலைவர் இளமறம் கரீம் எம்.பி. தலைமையில் விவாதித்தது. ஆர்.கருமலையான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

♦ மாற்றுக் கொள்கைக்கான போராட்டம் தொடர்பான ஆணையம், அதன் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா தலைமையில் விவாதித்தது.

♦ வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு திறனுக்கான மாற்றங்கள்... குறித்த ஆணையம், அதன் தலைவர் ஸ்வதேஷ் தேவ்ராய் தலைமையில் விவாதித்தது.

♦ சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்... குறித்த ஆணையம், அதன் தலைவர் ஏ.ஆர்.சிந்து தலைமையில் விவாதித்தது.

;